சிறப்புத் தேவைகள் கொண்ட 12 வயது சிறுமியுடன் வாகனத்தில் தப்பிச் சென்ற ஆடவர் கைது

கப்பாளா பத்தாஸ் வட்டாரம் பெனாகாவில் சிறப்புத் தேவைகள் கொண்ட 12 வயது சிறுமியுடன் வாகனத்தில் தப்பிச் சென்ற ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செபராங் பிறை உத்தாரா OCPD உதவி ஆணையர் அனுவர் அப்துல் ரஹ்மான் கூறுகையில், சிறுமியின் தாய் தனது கணவரின் பட்டறைக்கு என்ஜின் எண்ணெயை வழங்கச் சென்றிருந்தபோது, ​​தனது மகளை காரில் விட்டுவிட்டு, இயந்திரம் இன்னும் இயங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.

இருப்பினும், 40 வயதுடைய அந்தப் பெண், வாகனத்திற்குத் திரும்பியபோது, ​​காரும் மகளும் காணாமல் போனதைக் கண்டுபிடித்தார். பின்னர், தனது மகளிடம் இருந்த தனது தொலைபேசியைக் கண்டுபிடிக்க இருப்பிட கண்காணிப்பு செயலியைப் பயன்படுத்திய போது  மகள் பட்டர்வொர்த்தின் பாகன் லாலாங் பகுதியில் இருப்பதைக் கண்டறிந்தார் என்று அவர் சனிக்கிழமை (ஜூன் 21) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தத் தகவலின் அடிப்படையில், செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழு, பட்டர்வொர்த் காவல் நிலையத்தைச் சேர்ந்த பணியாளர்களுடன் சேர்ந்து, ஒரு சந்தேக நபரைக் கைது செய்து, பாதிக்கப்பட்டவரையும், வாகனத்தையும் மீட்டதாக அவர் மேலும் கூறினார்.

60 வயதுடைய சந்தேக நபருக்கு ஏழு வழக்குகள், 11 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் உள்ளதாக சோதனைகளில் தெரியவந்ததாக அவர் கூறினார்.

கடத்தப்பட்ட சிறுமி நல்ல நிலையில் உள்ளார். அவருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை. அவர் மருத்துவ பரிசோதனைக்காக கப்பாள பத்தாஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று அவர் மேலும் கூறினார். மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக அனுவார் கூறினார். இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 379A மற்றும் 363 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here