ஷாஆலமில் ஏற்பட்ட வெள்ளம்: 12 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தற்காலிக முகாமில் தஞ்சம்

ஷா ஆலம்: தாமான் புக்கிட் கெமுனிங்கில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, 12 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 61 பேர்  டேவான் ஆஸ்டர், செக்‌ஷன் 32 இல் உள்ள தற்காலிக வெளியேற்ற மையத்தில் இன்னும் தஞ்சமடைந்துள்ளனர். சமூக நலத்துறையின் இன்ஃபோ பென்கானா போர்ட்டலின்படி, சனிக்கிழமை (ஜூன் 21) நண்பகல் நிலவரப்படி, வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. இது மாலை 4 மணிக்கு நிவாரண மையம் திறக்கப்பட்டதிலிருந்து 298 நபர்களைப் பதிவு செய்தது. இதற்கிடையில், ஷா ஆலம் செக்‌ஷன்15 தீயணைப்பு மீட்பு நிலையத் தலைவர் அஹ்மட் நஸ்மி ஹலீல் கூறுகையில், கண்காணிப்பின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட இடத்தில் நிலைமை மீண்டு கட்டுப்பாட்டில் உள்ளது.

சம்பவ இடத்தில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் கண்காணிப்பின் அடிப்படையில், வானிலை தெளிவாக உள்ளது, வெள்ள நீர் முழுமையாக குறைந்துள்ளது. மேலும் வடிகால் அமைப்பில் நீர் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று அவர் சனிக்கிழமை பெர்னாமாவிடம் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை, ஷா ஆலம் மண்டல தீயணைப்புத் தலைவர் அஹ்மட் ஜைதி சஃபுவான் கூறுகையில், குடியிருப்புப் பகுதியிலிருந்து தண்ணீரைத் திருப்பிவிடுவதற்குப் பொறுப்பான பிரதான வடிகால் பம்ப் செயலிழந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here