இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த பத்து நாட்களாக பெய்த கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த 26ம் தேதி பருவ மழை தொடங்கியது. தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சில இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்நிலையில் ஜூன் 26ம் தேதி முதல் வடமேற்கு கைபர் பக்துன்க்வா, கிழக்கு பஞ்சாப், தெற்கு சிந்து மற்றும் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணங்களில் பத்து நாட்களில் கடும் மழை தீர்க்கிறது.
இதனிடையே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.









