கிள்ளானில் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திலும், பயன்படுத்தப்பட்ட தோட்டா உறைகள் கண்டுபிடிக்கப்பட்டதிலும் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர். தென் கிள்ளானில் இரவு 11.15 மணிக்கு இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களில் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு புகார் கிடைத்ததாக தென் கிள்ளான் காவல் துறை துணைத் தலைவர் கமலாரிஃபின் அமன் ஷா தெரிவித்தார். சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றார்.
சம்பந்தப்பட்ட சந்தேக நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றத்திற்காக 1960 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் பிரிவு 39 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் திங்கள்கிழமை (ஜூலை 28) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வழக்கு தொடர்பான ஏதேனும் தகவல் உள்ள பொதுமக்கள் விசாரணைக்கு உதவ தெற்கு கிள்ளானில் மாவட்ட காவல் தலைமையகத்தை 03-3376 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்னதாக, கிள்ளானில் உள்ள தாமான் செந்தோசாவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகக் கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.









