ஜோகூர் பாரு மாநகர மன்றம் (MBJB) 68ஆவது தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து போக்குவரத்து, கார் நிறுத்துமிட அபராதங்களுக்கு 80% வரை தள்ளுபடியை வழங்குகிறது. ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 31 வரை இயங்கும் இந்த சலுகை, நிலுவையில் உள்ள அபராதங்களை பொதுமக்கள் செலுத்த ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது என்று MBJB ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2016 முதல் டிசம்பர் 2024 வரை வழங்கப்பட்ட அபராதங்களுக்கு 80% தள்ளுபடி பொருந்தும். 2025 இல் வழங்கப்பட்ட அபராதங்களுக்கு, எங்கள் நிலையான விகிதத்திற்கு ஏற்ப 60% தள்ளுபடி வழங்கப்படும் என்று அது கூறியது. MBJBSpot செயலி, MBJB சேவை கவுண்டர்கள், MBJB கட்டண கியோஸ்க்குகள், e-Khidmat செயலி PBTPay போர்டல் உள்ளிட்ட பல சேனல்கள் மூலம் பணம் செலுத்தலாம்.









