ஈப்போ: லுமுட்டில் நடந்த திறந்தவெளி நீச்சல் போட்டியில் பங்கேற்ற சுமார் 30 குழந்தைகள் இன்று அதிகாலை ஜெல்லிமீன்களால் காயத்திற்கு உள்ளானர். அவர்களில் பெரும்பாலோருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட வேளையில் மூன்று பேருக்கு சற்று அதிகமான காயங்களுக்கு ஆளாகியிருந்தனர்.
தெலுக் செனாங்கின் கடற்கரையில் நடந்த போட்டி, பேராக் நீச்சல் சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் திறந்தவெளி நீர் நிகழ்வாகும். இதில் சுமார் 225 பேர் பங்கேற்றனர். 30 முதல் 40 நீச்சல் வீரர்கள் அலையில் மிதக்கும் ஜெல்லிமீன்களால் காயங்களுக்கு ஆளாகினர். மாநில நிர்வாக உறுப்பினர் ஏ. சிவனேசன் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 11 முதல் 15 வயதுடைய சிறுவர்கள் என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டது.








