புக்கிட் மெர்தாஜாம்: பெராய் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு டிரெய்லர்-லோரி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததோடு அவரது மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்தது.
28 வயதான சியாஹிம் ருஸ்மான் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் விபத்தில் காயமடைந்தார். லோரி ஓட்டுநர் காயமடையவில்லை. மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 37 வயதுடைய நபர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.








