புத்ரஜெயா: ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) நடைபெற்ற 2025 தேசிய தின விழாவில் மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிமை வரவேற்க கூட்டத்தினரின் முழக்கங்களும், ஆரவாரங்களும் விண்ணை பிளந்தன. அவரின் துணைவியார் ராஜா ஜரித் சோபியாவும் அவருடன் இணைந்தார். இந்த ஜோடி ஸ்டைலான நீல நிற புரோட்டான் சத்ரியா நியோ R3 காரில் வந்தது.
ஜோகூர் இராணுவப் படைகள் ஆயுதப்படைகள், காவல்துறையினரும் டத்தாரான் புத்ராஜெயா வரை மாட்சிமையுடன் உடன் வந்தனர். அவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வரவேற்றார்.
அவர் வந்தவுடன் ஆயிரக்கணக்கான மலேசியர்களின் ஹாரன் சத்தமும், ஆரவாரமும் கேட்டன, அதைத் தொடர்ந்து தேசிய கீதமான நெகாராகூ இசைக்குழுவால் இசைக்கப்பட்டது. தேசியக் கொடியை தாங்கிய இராணுவ ஹெலிகாப்டர்களும் நிகழ்ச்சியின் போது மேலே பறந்தன.









