கோத்தா டாமன்சாரா அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து உணவகங்கள் எரிந்து நாசமாகின

பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமன்சாராவில்  உள்ள ஜாலான் பெகாகா 8/1, Gugusan Kesumbar பிளாட் சி-யில் இன்று பிற்பகல் (செப்டம்பர் 19) ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து உணவகங்கள் எரிந்து நாசமாகின. சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் அஹ்மத் முகிலிஸ் முக்தார், தீ விபத்து குறித்து மாலை 6.06 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.

சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து முதல் தீயணைப்பு இயந்திரம் மாலை 6.20 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்து மாலை 6.24 மணிக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தது என்று அவர் இன்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தீ விபத்தில் 50×50 சதுர அடி பரப்பளவு கொண்ட ஐந்து உணவகங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீ விபத்தில் இரண்டு கார்கள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here