அம்பிகையின் அருளை அனைவரும் பெற வேண்டும்: நவராத்திரி விழாவில் குணராஜ் வேண்டுகோள்

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி விழா மிகவும் விசேஷமானது. துர்க்கை, லட்சுமி, பார்வதி என முப்பெரும் தேவியர்களின் விழாவே நவராத்திரி விழாவாகும்.

உலகளவில் கொண்டாடப்படும் நவராத்திரி விழா நம் நாட்டிலும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி விழா கோலாலம்பூர் கம்போங் காசிபிள்ளையில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ருத்ரா தேவி சமாஜத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சமாஜத்தின் தலைவரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ் ஜார்ஜ் குடும்பத்தார் நவராத்திரியின் 4ஆவது நாள் உபயத்தை ஏற்றுக் கொண்டனர்.  நவராத்திரி குறித்து பேசியபோது நாம் கொண்டாடும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி விழா. அந்த விழா நமது ருத்ரா தேவி சமாஜத்தில் ஏறக்குறைய 30 ஆண்டுகளாக விமரிசையாக நடைபெற்று வருகிறது.  கேட்டத்தை கொடுக்கும் முப்பெரும் தேவியரின் நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு அனைவரும் அன்னையின் அருளை பெற்றுய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here