குழந்தையை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆடவர்

நீலாய் (Nilai):

எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், தன்னுடைய உயிரை பணயம் வைத்து , 9 வயது சிறுவனை மீட்க கழிவுநீர் தொட்டிக்குள் பாய்ந்த துணிச்சலான மனிதர் ஒருவரின் செயல் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று காலை 10 மணியளவில் நிலாயிலுள்ள ஒரு பள்ளியின் விளையாட்டு தின விழாவின் போது நிகழ்ந்தது. பள்ளி வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்த சிறுவனை காப்பாற்ற 35 வயதான Muhammad Arsyad Jahaya பாய்ந்து மீட்க முயன்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சிறுவன் உயிரிழந்தான்.

“நான் சிறுவர்கள் ஓட்டப்பந்தயத்தை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர் வந்து, ‘உங்களுக்கு நீந்தத் தெரியுமா?” என்று கேட்டு உதவி கோரியதாக அர்ஷாத் விளக்கினார்.

முதலில் ஆபத்தை உணர்ந்து சில நிமிடங்கள் தயங்கிய அவர் , பின்னர் குழந்தையின் தொப்பியும் செருப்பும் நீரில் மிதப்பதை கண்டு உடனடியாக தொட்டிக்குள் பாய்ந்தார். “குழந்தையின் கையைத் தொட்டு பிடித்து மேலே தள்ளினேன். மேலிருந்தவர்கள் அவனைப் பிடித்து இழுத்தனர், எனினும் குழந்தை அப்போது உணர்வு இழந்த நிலையில் இருந்தது” என வருத்தத்துடன் அவர் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here