கோலாலம்பூர்:
ஈரானில் உள்ள மலேசிய தூதரம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் தெரிவித்தார்.
முன்னதாக ஈரான் – இஸ்ரேல் இடையிலான பதற்ற நிலை காரணமாக அங்குள்ள மலேசிய தூதரகம் கடந்த ஜூன் மாதம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில் தூதரகம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியதாக குறிப்பிட்டாலும் அந்த தேதியை அமைச்சர் குறிப்பிடவில்லை.
அதே சமயம் தூதரம் மூடப்பட்ட சமயத்தில் தாயகம் திரும்பிய தூதர் கைரி ஓமாரும் தற்போது மீண்டும் பணியில் இணைந்துள்ளார் என்றும் அமைச்சர் சொன்னார்.




















