நாடு முழுவதும் BUDI95 திட்டம் தொடங்கியது, 16 மில்லியன் மலேசியர்களுக்கு RON95 பெட்ரோல் RM1.99 என்ற விலையில் கிடைக்கும்

கோலாலம்பூர்:

க்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளைக் குறைக்கும் நோக்கில், Budi Madani RON95 (BUDI95) முயற்சியின் கீழ் 16 மில்லியன் மலேசியர்கள் நள்ளிரவு முதல் இந்த சலுகைகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்.

இந்த திட்டம் RON95 பெட்ரோலின் விலையை லிட்டருக்கு RM1.99 ஆக நிர்ணயிக்கிறது, இது வழக்கமான சந்தை விளையான RM2.05 இலிருந்து குறைக்கப்படுகிறது, ஒவ்வொரு நபரும் ஒரு மாதத்திற்கு 300 லிட்டர் பெட்ரோல் வரை கொள்வனவு செய்ய தகுதியுடையவர்கள்.

தலைநகரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மேற்கொண்ட சோதனைகளில் , BUDI95 சலுகைகளை அனுபவிக்க முதலில் நள்ளிரவு வரை காத்திருக்க ஆர்வமுள்ள வாகன ஓட்டிகளைக் காணமுடிந்தது, அதேநேரம் இதனை செயற்படுத்தும்இருந்தனர்.

BUDI95 செப்டம்பர் 27 அன்று கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் ஞாயிற்றுக்கிழமை B40 பிரிவின் கீழ் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான சும்பங்கான் துனை ரஹ்மா (STR) பெறுநர்களை சென்றடைந்தது.

முதல் நாளில் கிட்டத்தட்ட 20 சதவீத ராணுவ மற்றும் காவல்துறை பணியாளர்கள் BUDI95 பரிவர்த்தனைகளைச் செய்தனர், இந்தத் திட்டம் STR பெறுநர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பிறகு RON95 கொள்முதல்கள் ஒரு நாளைக்கு RM3.7 மில்லியனை எட்டியதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

BUDI95 ஒரு எளிய பரிவர்த்தனை செயல்முறையை வழங்குகிறது, தானியங்கி தகுதி சரிபார்ப்புக்கு செல்லுபடியாகும் MyKad அல்லது ஓட்டுநர் உரிமம் மட்டுமே தேவைப்படுகிறது, அதே நேரத்தில் பயனரின் விருப்பமான டிஜிட்டல் வாலட் செயலி மூலம் பணம் செலுத்த முடியும்.

இந்த முயற்சி பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் நிதி சமநிலைக்கு பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,

BUDI95 பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.budimadani.gov.my இல் உள்ள அதிகாரப்பூர்வ போர்ட்டலைப் பார்வையிடவும் அல்லது 1-300-88-9595 என்ற உதவி எண்ணை அழைக்குமாறும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here