தனது இறந்த மகளின் உடலுடன் பல நாட்கள் வாழ்ந்து வந்த 69 வயது பார்வையற்ற பெண், ரூமா ஶ்ரீ கெனாங்கன் சமூக நல இல்லத்தில் தப்க்க வைக்கப்பட்டுள்ளார். பெண்கள், குடும்பம் சமூக மேம்பாட்டு அமைச்சர் நான்சி ஷுக்ரி, அந்தப் பெண்ணின் ஒட்டுமொத்த உடல்நிலையை அறிய விரிவான உடல், உளவியல் மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்படும் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.
கூச்சிங்கின் கோத்தா சமரஹானில் உள்ள ஜாலான் கம்போங் தெலோக் சபாங்கில் உள்ள ஒரு குடிசையில் தனது மகளின் உடலுடன் பல நாட்கள் கழித்த பின்னர், பார்வை குறைபாடுள்ள பெண் நேற்று உதவி பெற 150 மீட்டர் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நவம்பர் 30 ஆம் தேதி தனது 48 வயது மகள் நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக இறந்துவிட்டதை அந்தப் பெண் உணர்ந்ததாக கோத்தா சமரஹான் காவல்துறைத் தலைவர் டமாட்டரிஸ் லௌடின் தெரிவித்தார். இருப்பினும், தனது மகளின் உடலில் இருந்து வரும் துர்நாற்றம் காரணமாக குடிசையிலிருந்து ஊர்ந்து சென்று உதவி பெறும் வரை அவரால் உதவியை நாட முடியவில்லை.
தனது மகள் இறந்த பிறகு அந்தப் பெண் தனியாக இருப்பதால், அவளை சமூக நல இல்லத்தில் வைப்பது நல்லது என்று நான்சி கூறினார். இன்று கூச்சிங்கில் உள்ள சரவாக் கலாச்சார கிராமத்தில் நடந்த காஸ்ட்ரோனமி நியாமாய் சரவாக் 2025 விழாவில் சந்தித்த நான்சி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க சமூகத் தலைவர்கள் மிகவும் விழிப்புடனும், குடியிருப்பாளர்களின் நலனில் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது சமூக நலத் துறை மூலம் அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி வடிவங்கள் குறித்த துல்லியமான தகவல்களை கிராம மக்கள் பெறுவதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.








