அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்; 2025 ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act 2025) (ONSA)

1. 2025 ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் என்றால் என்ன?

2025 ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் (ONSA) என்பது, இணையத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களில் இருந்து பொதுமக்களை, குறிப்பாக குழந்தைகள், குடும்பங்கள், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதற்காக, சேவை வழங்குநர்கள் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டமாகும்.

2. இந்தச் சட்டம் யாருக்குப் பொருந்தும்? இது சாதாரண பயனர்களுக்கும் பொருந்துமா?
2025 ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் (ONSA), 1998 தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் (CMA 1998)கீழ் உரிமம் பெற்ற Applications Service Provid- ers (ASP), ContentApplications Service Providers (CASP), Network Service Providers (NSP) ஆகியோருக்குப் பொருந்தும். இவர்கள் அனைவரும் சேர்ந்து உரிமம் பெற்ற சேவை வழங்குநர்கள்'(Licensed Service Providers) என அழைக்கப்படுகின்றனர்.
ONSA இன் கீழ் விதிக்கப்படும் அனைத்து ஒழுங்குமுறை கடமைகளும் உரிமம் பெற்ற சேவை வழங்குநர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்தச் சட்டம் தனிப்பட்ட பயனர்களுக்குப் பொருந்தாது.

3. தற்போதைய உரிமம் கட்டமைப்பின் கீழ் எந்தச் சேவை வழங்குநர்கள் உரிமம் பெற்றவர்களாகக் கருதப்படுகின்றனர்?
தற்போதைய உரிமம் கட்டமைப்பின் கீழ், மலேசியாவில் எட்டு (8) மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட பயனர்களைக் கொண்ட இணையச் செய்தியிடல் அல்லது சமூக ஊடக சேவைகளை வழங்கும் சேவை வழங்குநர்கள், ASP(C) உரிமம் பெற்றவர்களாகப் பதிவு செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இதன் விளைவாக, இச்சேவை வழங்குநர்கள் மலேசியாவின் ஒழுங்குமுறை தேவைகளின் வரம்பிற்குள் கொண்டு வரப்படுகின்றனர். உரிமம் பெறுவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்யும் சமூக ஊடகத் தளங்கள், ONSA விதிகளுக்கு இணங்க செயல்பட வேண்டும்.

4.ONSA ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது?
மேலும் அதிகமான மக்கள் இணையத்தில் நேரம் செலவிடுவதால், குழந்தைகள் மீது நடைபெறும் குழந்தை பாலியல் சுரண்டல், இணைய மோசடிகள், இணையத் துன்புறுத்தல் (cyberbullying), தீவிரவாத உள்ளடக்கங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுக்கு அவர்கள் அதிகமாக எதிர்நோக்குகின்றனர். இவ்வாறான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கையாள்வதற்காக, உரிமம் பெற்ற சேவை வழங்குநர்களுக்குத் தெளிவான பொறுப்புகளை விதிக்கும் நோக்கில் ONSA அறிமுகப்படுத்தப்பட்டது.

ONSA, உரிமம் பெற்ற சேவை வழங்குநர்கள் தீங்குகளைத் தடுக்கும், கண்டறியும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்புடன் செயல்படுவதை உறுதிப்படுத்துவதன் மூலம், பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இதன் மூலம், மலேசியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் மேலும் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்க உதவுகிறது.

5. ONSA கீழ் உரிமம் பெற்ற சேவை வழங்குநர்களுக்கு (Licensed Service Providers) என்ன கடமைகள் உள்ளன?
உரிமம் பெற்ற ASP மேலும் CASPகள், இணையத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களில் இருந்து பயனர்களைப் பாதுகாக்க முன்னோக்கி நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதில், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுக்கு உட்படும் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிடுதல், பயனர்களுக்கான இணைய பாதுகாப்புக் கருவிகளை வழங்குதல், தங்களின் சேவைகளின் மூலம் பயனர் உதவியை வழங்குதல், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை எளிதாகப் புகாரளிக்க வசதி ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

மேலும், உரிமம் பெற்ற ASP, CASPகள், அனைத்து பயனர்களின் இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளையும் அமல்படுத்த வேண்டும். இதில்,
குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் (CSAM), இணைய நிதி மோசடி தொடர்பான உள்ளடக்கங்கள் போன்ற முன்னுரிமை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள், அனைத்து பயனர்களுக்கும் அணுக முடியாதவையாக இருப்பதை உறுதிசெய்தல் அடங்கும். கூடுதலாக, மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளை விளக்கும் Online Safety Plan ஒன்றைத் தயாரித்து வெளியிடவும் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

உரிமம் பெற்ற NSPகள், விசாரணைகளின்போது ஒத்துழைப்பு வழங்கவும், தேவையானபோது தங்களின் திறன் வரம்பிற்குள் நியாயமான தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் வேண்டும். மேலும், ONSA இன் விதிமுறைகளுக்கு இணக்கம் உறுதிப்படுத்தும் நோக்கில், தொடர்புடைய தகவல்களை வழங்கி ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கவும் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

6.ONSA இன் கீழ் ‘தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம்’ (harmful content’), ‘முன்னுரிமை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம்’ (priority harmful content”) என்பதன் பொருள் என்ன?
2025 ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் (ONSA) இன் கீழ், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்க வகைகள் முதல் அட்டவணையில் (First Schedule) பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன:
a) குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் (CSAM);
b) நிதி மோசடி தொடர்பான உள்ளடக்கம்;
C) ஆபாசமான (obscene) உள்ளடக்கம்;
d) அநாகரிகமான (indecent) உள்ளடக்கம்;
e) துன்புறுத்தல், மனவேதனை,
ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கம்; அச்சம் அல்லது பதற்றத்தை
f) வன்முறை அல்லது தீவிரவாதத்தைடஞ் தூண்டும் உள்ளடக்கம்;
ஒரு குழந்தையை தன்னைத்தானே காயப்படுத்தச் செய்யக்கூடிய உள்ளடக்கம்; விரோதம் அல்லது பகைமையை ஊக்குவித்து, பொது அமைதியைப் பாதிக்கக்கூடிய உள்ளடக்கம்;
i) ஆபத்தான போதைப்பொருட்களின் பயன்பாடு அல்லது விற்பனையை ஊக்குவிக்கும் உள்ளடக்கம்.
இவற்றில், குழந்தை பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் (CSAM), நிதி மோசடி தொடர்பான உள்ளடக்கங்கள் ”முன்னுரிமை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் (‘pri- ority harmful content’) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான உள்ளடக்கங்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவை முடிந்தவரை விரைவாக அனைத்து பயனர்களுக்கும் அணுக முடியாதவையாக மாற்றப்பட வேண்டும்.

7. பயனர்கள் எந்த மாற்றங்களைக் காணலாம் ?
ONSA இன் கீழ், இணைய பாதுகாப்பு தொடர்பாக தளங்கள் மேலும் ஒரே மாதிரியான, அளவோடு சமநிலையாக்கப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்ளும் என பயனர்கள் எதிர்பார்க்கலாம். இதன் பொருள், தளங்களில் தெளிவான பாதுகாப்புத் தகவல்கள், வழிகாட்டுதல்கள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை எளிதாகப் புகாரளிக்கும் வசதிகள், மேலும் விரைவாகப் பதிலளிக்கும் உதவி, யார் உங்களைக் கண்டுபிடிக்கலாம், தொடர்பு கொள்ளலாம் அல்லது தொடர்பாடலாம் என்பதைக் கட்டுப்படுத்த உதவும் சிறந்த கருவிகள், அமைப்புகள் வழங்கப்படுவதாகும்.

குழந்தைகள் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் சேவைகளில், காலப்போக்கில் மேலும் வலுவான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதில், பாதுகாப்பான இயல்புநிலை அமைப்புகள், வலுவான தனியுரிமை பாதுகாப்பு, தொடர்பாடல்களை மேலதிகமாக கட்டுப்படுத்தும் வசதிகள் ஆகியவை அடங்கலாம்.

8. ONSA கீழ், வயது உறுதிப்படுத்தலுக்காக (age assurance) குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என உரிமம் பெற்ற சேவை வழங்குநர்களிடம் கட்டாயப்படுத்தப்படுகிறதா?
ONSA இன் முக்கிய விதிமுறைகள், உரிமம் பெற்ற சேவை வழங்குநர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய எந்தவொரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையும் நிர்ணயிப்பதில்லை.

எனினும், மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC), MyKad,
பாஸ்போர்ட், MyDigital ID போன்ற அரசால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தும் வயது உறுதிப்படுத்தல் (age verification) அணுகுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முறைகளை தற்போது ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வு, தொடர்புடைய அரசுத் துறைகள், சமூக ஊடகத் தளங்களின் பங்கேற்புடன், ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ் (regulatory sandbox) செயல்முறை வழியாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த மதிப்பீட்டில், பயனர் பாதுகாப்பு, தனிப்பட்ட தரவு பாதுகாப்பு, தனியுரிமை தொடர்பான அம்சங்கள், மேலும் மலேசியாவின் சட்ட, ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு ஏற்ற தன்மை ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.
மிகவும் பொருத்தமான வயது உறுதிப்படுத்தல் நடைமுறை, ONSA இன் தொடர்புடைய துணை விதிமுறைகள் (subsidiary instruments) மூலம் இறுதியாக நிர்ணயிக்கப்படும்.

9. ONSA பெற்றோர் தங்களின் குழந்தைகளை இணையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க எவ்வாறு உதவுகிறது ? ONSA, பெற்றோருக்கு உதவுவதற்காக, தளங்கள் சிறந்த பாதுகாப்புக் கருவிகள், தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது. இதில், யார் குழந்தைகளைத் தொடர்பு கொள்ளலாம் என்பதைக் கட்டுப்படுத்த பெற்றோருக்கு உதவும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள், குழந்தைகள் அணுகக்கூடிய அல்லது அவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் உள்ளடக்க வகைகளை நிர்வகிக்கும் அமைப்புகள், பாதுகாப்பான பயன்பாட்டிற்கான தெளிவான வழிகாட்டுதல்கள், மேலும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைப் புகாரளிக்கவும் பயனர் உதவியைப் பெறவும் பயன்படும் நடைமுறைகள் ஆகியவை அடங்கும்.

10. ONSA மூலம் மலேசியர்கள் எவ்வாறு பயனடைவார்கள்?
2025 ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் (ONSA), மலேசியாவில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகள், குடும்பங்கள், பாதுகாப்பு தேவைப்படும் குழுக்களுக்கு, மேலும் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்க உதவுகிறது.
சமூக ஊடகத் தளங்கள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுக்கு எதிராக வேகமாகவும் பொறுப்புடன் செயல்படவும், மேலும் தெளிவான பாதுகாப்பு தரநிலைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகின்றன.

ONSA, குழந்தைகள், குடும்பங்கள், பாதுகாப்பு தேவைப்படும் பயனர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், அனைத்து மலேசியர்களுக்கும் பாதுகாப்பான, நம்பகமான இணையச் சூழலை உறுதிப்படுத்த உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here