தங்க முதலீட்டுத் திட்டத்தில் ஈடுபட்டு வரும் பப்ளிக் கோல்டு (Public Gold) நிறுவனம் தனது சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் பண்டார் உத்தாமா, ஓன் வோர்ல்டு ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
கடந்த 2008ஆம் ஆண்டில் பினாங்கில் முதன் முதலாக தொடங்கப்பட்ட பப்ளிக் கோல்டு நிறுவனம் தற்போது நாடு முழுவதும் 30 கிளை நிறுவனங்களைக் கொண்டிருப்பதோடு இந்தோனேசியா, சிங்கப்பூர், துபாய் (ஐக்கிய அரபு சிற்றரசு), லண்டன் என பல்வேறு நாடுகளிலும் நிறுவனத்தை நடத்தி வருவதாக அதன் நிறுவனரும் பப்ளிக் கோல்டு குழுமத்தின் நிர்வாகத் தலைவருமான டத்தோஸ்ரீ லூயிஸ் இங் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் 2.3 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள பப்ளிக் கோல்டு நிறுவனம் உலகில் முதன் முதலாக தங்க பட்டுவாடா செயலியை (Mesin ATM Emas) அறிமுகம் செய்த பெருமை இந்நிறுவனத்திற்கே உண்டு.
2008 முதல் தற்போது வரை இந்நிறுவனம் 23.5 பில்லியன் மதிப்புள்ள வருமானத்தை ஈட்டியுள்ளது எனவும் இந்நாள் வரையிலும் 88 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளது.55 டன் மதிப்பிலான 52 டன் தங்கத்தை மீண்டும் வாங்கியுள்ளது. பப்ளிக் கோல்டு நிறுவனம் உள்நாட்டில் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் வெற்றிகரமான வணிகத்தைக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
ஒரு சங்கிலி தொடர் போன்ற இந்த வணிகத்தில் இந்தியர்கள் பலரும் ஈடுபட்டு சாதனை புரிந்து வருகின்றனர். சீனர்களைப் போலவே இந்தியர்களும் இந்த முதலீட்டுத் திட்டத்தில் ஈடுபட்டு லாபகரமான வருமானத்தை ஈட்டுகின்றனர். இந்தியர்களும் இந்த முதலீட்டுத் திட்டத்தில் பங்குக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
முறையாக பதிவு பெற்று முழு பாதுகாப்பு உத்தரவாதத்துடன் செயல்படும் பப்ளிக் கோல்டு நிறுவனத்தில் இந்தியர்கள் இணையலாம் என்று டத்தோஸ்ரீ லூயிஸ் இங் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் மில்லியன் ஸ்டார் ட்ரீப்பள் டைமண்ட் விருதை முகமட் ஸூல்கிப்ளி பின் ஷாபி, அவரது துணைவியார் நஜ்டா பிந்தி முகமட் ஹுசேய்ன் ஆகியோர் வென்றனர். இந்த விருதின் மதிப்பு 2,091, 294.84 ரிங்கிட் ஆகும். இதனிடையே, 7 பிரிவுகளில் பல்வேறு விருதுகளை வென்றவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியன் பயனர்களை எட்டுவதே பப்ளிக் கோல்டு நிறுவனத்தின் இலக்கு என்று அவர் சொன்னார்.
– எஸ்.சண்முகம்











