பாகிஸ்தான் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. தீயணைப்பு வீரர் உட்பட 6 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பிஸியான எம்.ஏ.ஜின்னா சாலையில் ‘குல் பிளாசாவில்’ என்ற அடுக்குமாடி வணிக வளாகம் அமைந்துள்ளது.

இங்கு நேற்று 10:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. 12 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்த நிலையில், இன்று மதியம் வரை மீட்புப் பணிகள் தொடர்ந்தன.

இந்த விபத்தில் இதுவரை 1 தீயணைப்பு வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கட்டிடத்தின் தரைத்தளம் மற்றும் பல அடுக்கு அமைப்புகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததால், மீட்புக் குழுவினர் உள்ளே செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

மேலும் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாகத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகத் தீ வேகமாகப் பரவி உள்ளது.

சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here