தாயாரை கொலை செய்ததாக மகன் மீது கொலை குற்றச்சாட்டு

தனது தாயாரைக் கொலை செய்ததாக  அலோர் ஸ்டார் நீதிமன்றத்தில் இன்று ஒரு தொழிற்சாலை தொழிலாளியான மகன் மீது  குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி எலியானா இஸ்மாயில் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, 29 வயதான அமிருல் ஷபிக் ஷம்ஷுல் ஜஹாரி தலை அசைத்ததாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது. கொலை உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

பிப்ரவரி 2ஆம் தேதி அன்று அதிகாலை 3.15 மணி முதல் காலை 8 மணி வரை அலோர் ஸ்டார், தஞ்சோங் பெண்டஹாரா, தாமான் சுல்தான் அப்துல் ஹலிமில் உள்ள ஒரு வீட்டில் வங்கி நிர்வாகி சஹ்ருல்லைல் பாசிர் (52) என்பவரைக் கொலை செய்ததாக அமிருல் மீது குற்றம் சாட்டப்பட்டது. மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

துணை அரசு வழக்கறிஞர் நூர் ஃபாடின் அசேரா நோர்ஹிஷாம் வழக்குத் தொடர்ந்தார். அமிருல் ஆஜராகவில்லை. பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கைகள் வழங்கப்படும் வரை, வழக்கு விசாரணையை மே 11 ஆம் தேதிக்கு  நீதிமன்றம் ஒத்திவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here