கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோ சு புய் – பெர்மிம் சந்திப்பு

பெர்மிம் (PERMIM) பேரவையின் தேசிய தலைவர்  முகமது அஸ்மான் ஷா தலைமையிலான செயற்குழு குழுவினர், கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோ சு புய் அவர்களுடன் இந்திய முஸ்லிம் சமூகத்தின் குறிப்பாக கூட்டரசுப் பிரதேசத்தில் வாழும் இந்திய முஸ்லீம் சமூகத்தின் தற்போதைய பிரச்சினைகள் குறித்து சுமார் ஒன்றரை மணி நேரம் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் துணைத் தலைவர் ஹாஜி முகமது சுல்தான், உதவித் தலைவர்கள் துவான். கலீலுர்ஜாமான்,  அப்துல் மாலிக், ஜரீனா பேகம், பெர்மிம் பொதுச்செயலாளர்  ஆதாம், மாலிக் ஆகியோர் உடனிருந்தனர்.

பெர்மிம், கூட்டரசுப் பிரதேச அமைச்சகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக மிகவும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் நோக்கம் இந்திய முஸ்லிம் சமூகத்தின் நல உதவி மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டை மேம்படுத்துவதாகும்.

2026/2027-ஆம் ஆண்டுத் தவணைக்காகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழுவிற்கு இது ஒரு சிறந்த தொடக்கமாகும் என்று அதன் தலைவர் முகமது அஸ்மான் ஷா கூறினார். இதனை தொடந்து வரும் காலங்களில் மலேசிய இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக மற்ற அமைச்சகங்களுடன் இணைந்து செயல்படப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here