இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா அறிவித்தது.

தற்போது பரஸ்பர வரியை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் இந்தியாவிடம் பழைய வரியான 3.5 சதவீதம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிரம்ப் அறிவித்த புதிய வரியான 15 சதவீதத்தால் இந்திய பொருட்களுக்கு 18.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்தப் பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டனில் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கவிருந்த முக்கியக் கூட்டம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு மற்றும் டிரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்புகளால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here