பெங்களூரு, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட அரபு நாடு களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அரபு நாடுகளில் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. இதையடுத்து இந்தியாவில் இருந்து அரபு நாடுக ளுக்கு செல்லும் விமானங்கள் நேற்றும் ரத்து செய்யப்பட்டன.









