சச்சின் டெண்டுல்கர் இல்ல திருமணவிழா: பிரபலங்கள் பங்கேற்பு

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் தொழிலதிபர் ரவி காயின் பேத்தி சானியா சந்தோக் ஆகியோரது திருமணம் இன்று மும்பையில் உள்ள தி செயின்ட் ரெஜிஸ் நட்சத்திர ஹோட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விளையாட்டு, சினிமா மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமணவிழாவில் கிரிக்கெட் வீரர்களான எம்.எஸ். தோனி, யுவராஜ் சிங், ஜாகீர் கான் மற்றும் ஹர்பஜன் சிங் மற்றும் திரையுலகினர்களான அமிதாப் பச்சன், ஷாருக் கான், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி மற்றும் அரசியல் தலைவர்கள ராஜ் தாக்கரே மற்றும் ஆந்திர மாநில மந்திரி நாரா லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.திருமணத்தின் முதல் புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் அனைவரும் இந்த ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here