80,886 டன் கச்சா எண்ணெய் உடன் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக குஜராத் வந்த இந்திய கப்பல்

புதுடெல்லி மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ப் பதற்றத்திற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கொடியுடன் கூடிய 4-வது எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக வந்து சேர்ந்துள்ளது.

மேற்காசிய மோதலால் ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்கியதற்கு பதிலடியாக ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த, இந்திய கொடியுடன் கூடிய 2 கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தது. அந்த இரண்டு கப்பலும் நேற்று முந்தினம் குஜராத்தின் முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது.

அதனைத்தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நந்தா தேவி என்ற 3வது இந்திய கப்பல் நேற்று அதிகாலையில் குஜராத்தை வந்தடைந்தது. இந்நிலையில், இன்று ஜக் லாட்கி கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சுமார் 80,886 டன் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது. இதன் மூலம் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து வந்த 4 வது கப்பல் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here