பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

ஆஷா போஸ்லே

பிரபல பாடகி ஆஷா போஸ்லே, 92, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நுரையீரல் பாதிப்பு, நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் இன்று (ஏப்ரல் 12) சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். மஹாராஷ்டிரா மாநிலம் சாங்கியில் 1933ம் ஆண்டு பிறந்தவர் ஆஷா போஸ்லே. இவர் மறைந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆவார். ஹிந்தி, தமிழ் உட்பட பல மொழிகளில் 70 ஆண்டுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.

தாதாசாஹிப் பால்கே, பத்மவிபூஷன் விருதுகளை பெற்ற ஆஷா, இரண்டு முறை தேசிய விருதும் பெற்று இருக்கிறார். இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் பல பாடல்களை பாடி இருக்கிறார். இவர் தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் பிரபலமான செண்பகமே… செண்பகமே பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here