புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை: சரவாக் அதிரடி நடவடிக்கையில் 21 குண்டர் கும்பல் உறுப்பினர்கள் கைது

சரவாக்கில் உள்ள கோத்தா சமரஹான், கூச்சிங், சிமுஞ்சான் மற்றும் படவான் ஆகிய பகுதிகளைச் சுற்றி நடந்த வன்முறைக் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 21 குண்டர்  கும்பலைச் சேர்ந்த  உறுப்பினர்களை, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நேற்று ‘Ops Pusak Merah’  நடவடிக்கையின் போது கைது செய்தது.

19 முதல் 44 வயதுக்குட்பட்ட அந்த நபர்கள், புக்கிட் அமான் சிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (டி9) மற்றும் சரவாக் காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியவற்றால் நேற்று நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் டத்தோ எம் குமார் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு முதல் இந்த மாவட்டங்களைச் சுற்றி வன்முறைக் குற்றங்களைத் தீவிரமாகச் செய்து வரும் குழுக்களை இந்த நடவடிக்கை குறிவைத்தது என்று அவர்  ஒரு அறிக்கையில் தெரிவித்தார். கலவரம், கடுமையான காயம் ஏற்படுத்துதல், கொள்ளை, தேசத்துரோகம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட, சந்தேக நபர்கள் அனைவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது ஆரம்பகட்ட சோதனையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here