நட்டி நட்ராஜின் “டிஎன் 2026” படம் ஓடிடியில் வெளியானது

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘டிஎன் 2026’. இந்தப் படத்தின் கதையை தம்பி ராமையா எழுதியுள்ளார். கண்ணன் ரவி தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தர்புர்கா சிவா இசையமைத்துள்ளார். படத்தில் நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கின்ஸ்லி, தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘ராஜா கிளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், உமாபதி ராமையா. இவர் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சாண்டி நடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், ‘டிஎன் 2026’ திரைப்படம் அமேசான் பிரைம், ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழக அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியான நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here