ஈப்போ: தைப்பிங் அருகே ஜாலான் இஸுதின் ஷாவில் உள்ள சுங்கை ஜெபோங் ஆற்றங்கரையில் குப்பைக் குவியலில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
ஆற்றங்கரையில் உள்ள குப்பைக் குவியலில் பொதுமக்கள் சடலத்தைக் கண்டெடுத்ததாக காவல்துறை மூலம் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது. தீயணைப்பு வீரர்களால் சடலம் மீட்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.









