மனித கடத்தல் முறியடிக்கப்பட்டதோடு 8 பேரை கைது செய்த ஜோகூர் போலீசார்

­பொந்தியான்: இரண்டு உள்ளூர் ஆண்கள், ஐந்து இந்தோனேசிய ஆண்கள் மற்றும் ஒரு இந்தோனேசியப் பெண் உட்பட, அந்த கும்பலின் உறுப்பினர்கள் என்று நம்பப்படும் எட்டு சந்தேக நபர்களைக் கைது செய்ததன் மூலம், ஒரு மனிதக் கடத்தல் கும்பலை காவல்துறை முடக்கியுள்ளது.

பொந்தியான் காவல் துறை கண்காணிப்பாளர் ஹஸ்ரத் ஹுசைன் மியோன் ஹுசைன் கூறுகையில், பொன்டியான் காவல்துறை, குக்குப் கடல்சார் காவல்துறை மற்றும் இஸ்கண்டார் புத்ரி காவல்துறை குழுக்கள் இணைந்து நடத்திய ‘ஆப்ஸ் பின்டாஸ்’ என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட கூட்டு நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டதாகத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்வதற்கு முன்பு, சுமார் இரண்டு வாரங்களாக நாங்கள் அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து வந்தோம் என்று கண்காணிப்பாளர் ஹஸ்ரத் ஹுசைன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அறியப்படாத பாதைகளைப் பயன்படுத்தி, அந்தக் கும்பல் ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட இந்தோனேசிய ஆண்களில் ஒருவர் போக்குவரத்துத் தொழிலாளியாகவும், மற்றொரு இந்தோனேசியரும் ஒரு உள்ளூர்வாசியும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை மறைத்து வைப்பதற்காக நிலத் தலைவராகவும் இடைத்தங்கல் இல்லத்தின் பராமரிப்பாளராகவும் செயல்பட்டதாக நம்பப்படுவதாக கண்காணிப்பாளர் ஹஸ்ரத் ஹுசைன் கூறினார்.

மற்றொரு இந்தோனேசிய ஆண் படகின் தலைவராகவும், மற்றொரு மலேசியர் கடற்கரையில் சட்டவிரோத குடியேறிகளுக்காகக் காத்திருக்க நியமிக்கப்பட்ட படகு உதவியாளராகவும் இருந்ததாக அவர் கூறினார். சட்டவிரோத இந்தோனேசிய குடியேறிகளான எட்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம் என்று கண்காணிப்பாளர் ஹத்ஸ்ரத் ஹுசைன் கூறினார். மேலும், கைது செய்யப்பட்டவர்களில், எட்டு கும்பல் உறுப்பினர்கள் உட்பட அனைவரும் 44 முதல் 52 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காவல்துறையினர் ஒரு கார், ஒரு பல்நோக்கு வாகனம், இரண்டு வாகனச் சாவிகள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல்கள், 40hp திறன் கொண்ட ஒரு ஃபைபர் படகு மற்றும் 17 கைபேசிகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு, ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் (Atipsom) 2007 (சட்டம் 670)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக கண்காணிப்பாளர் ஹத்ஸ்ரத் ஹுசைன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here