மும்பை, பாலிவுட் நடிகை சோனாக்சிசின்ஹா மற்றும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை ஜோதிகா ஆகியோர் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள ‘சிஸ்டம்’ திரைப்படம், வரும் மே 22-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
அஸ்வினி ஐயர் திவாரி இயக்கி உள்ள இப்படம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் (Legal Drama) படமாகும். இதில் சோனாக்சி சின்ஹா வசதி படைத்த மற்றும் செல்வாக்கு மிக்க அரசு வழக்கறிஞராக நடித்துள்ளார். ஜோதிகா எளிய பின்னணியில் இருந்து வந்த நீதிமன்ற சுருக்கெழுத்தாளராக (Stenographer) நடித்துள்ளார்.
சமூக அந்தஸ்தில் முற்றிலும் வேறுபட்ட இந்த இரு பெண்களும், புதைக்கப்பட்ட அநீதிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர எப்படி கைகோர்க்கிறார்கள்? அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கு இடையே அவர்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. இரு வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.




















