மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தம்? – தமிழக அரசு விளக்கம்

சென்னை, கடந்த திமுக அரசின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வந்தனர். இதனிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழ்நாடு அரசு சார்பாக, இதுகுறித்து எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இன்று (14.05.2026) அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா பயணச்சீட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here