ஹீரோவின் காதலி, பாடல் காட்சிகள்… தென்னிந்திய சினிமா குறித்து தமன்னா அதிரடி கருத்து

மும்பை, பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படத் துறைகளில் நடிகைகளுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறித்து நடிகை தமன்னா தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தமன்னா, நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள், முழுமையான வணிக ரீதியிலான பொழுதுபோக்கு திரைப்படங்கள் என தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கதைகளை தேர்வு செய்து நடிக்கும் வாய்ப்பு பாலிவுட்டில் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தென்னிந்திய சினிமா

தென்னிந்திய திரைப்படத் துறையில் தனது நீண்டகால பயணத்தை நினைவுகூர்ந்த தமன்னா, “தென்னிந்திய சினிமாவில் பல படங்கள் ஹீரோவை மையமாக வைத்து எடுக்கப்படுகின்றன. அதனால் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் குறைவாகவும், ஹீரோவின் காதலி அல்லது பாடல் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் சிலர் விமர்சிக்கிறார்கள். அந்த விமர்சனத்தின் காரணம் என்ன என்பதை காலப்போக்கில் நான் புரிந்துகொண்டேன்” என்று கூறினார். தமன்னாவில் இந்த கருத்து தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here