பெர்மிம் நிர்வாகக்குழு முன்னாள் தலைவர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் கலந்துரையாடல்

மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை பெர்மிமின் தற்போதைய நிர்வாகக்குழுவினர் அதன் முன்னாள் தலைவர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் சிறப்பான கலந்துரையாடல் நிகழ்வை சமீபத்தில் விஸ்மா பெர்மிம் வளாகத்தில் நடத்தினார்கள்.இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு, பெர்மிம் அமைப்பின் முன்னாள் தலைவர்கள் மற்றும் ஆலோசகர்கள் பெரும்பான்மையாக ஒன்றுகூடிய முக்கிய நிகழ்வாக அமைந்தது. இது அமைப்பின் வலுவான தலைமைத் தொடர்ச்சியையும் சமூகநல சேவைக்கான ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியது.

இந்த நிகழ்வு, மலேசியாவில் இந்திய முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக 53 ஆண்டுகளாகப் பணியாற்றி மலேசியாவில் சங்கங்களின் பதிவு இலாக்காவில் பதியப்பட்ட அரசுசாரா அமைப்புகளின் தாய் சபையாக போற்றப்படும் பெர்மிம் அமைப்பின் பாரம்பரியத்தையும் மேலும் வலுப்படுத்தியது. ஏறத்தாழ 70 சங்கங்களின் பிரதான தாயமைப்பாக விளங்கும் பெர்மிம், குறிப்பாக B40 மற்றும் அஸ்நாஃப் பிரிவினருக்கான சேவைகளில் முக்கிய பங்கை வகித்து வருகிறது.உரையாடல் கூட்டத்தின் போது, முன்னாள் தலைவர்கள் மற்றும் ஆலோசகர்கள் பெர்மிம் அமைப்பின் பங்கினை மேலும் வலுப்படுத்துவதற்கான பல மதிப்புமிக்க கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மேலும், இணைப்பு சங்கங்கள் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்பட்ட சமூக உருவாக்கத்திற்காக பெர்மிம் அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

பெர்மிம் அமைப்பு, இந்திய முஸ்லிம் சமூகத்தின் சமூக பொருளாதார முன்னேற்றத்தையும் உயர் கல்வி வளர்ச்சியையும் மேம்படுத்திட தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என உறுதி தெரிவித்துள்ளது. தற்போதைய நிர்வாக உறுப்பினர்களுக்கும் முன்னாள் தலைவர்களுக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றம், அமைப்பின் நீண்டநாள் நோக்கை வலுப்படுத்துவதோடு, எதிர்கால தலைமுறைக்கு பயனளிக்கும் வகையில் பெர்மிம் தொடர்ந்து செயல்பட வழிவகுக்கும் என அதன் தலைவர் அஸ்மான் ஷாஹ் கூறினார். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here