வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி டிரம்ப் வெற்றி பெற்று 2ஆவது முறையாக அதிபராக பதவியேற்க உள்ளார். அவர் புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி உரை ஆற்றினார். ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையாற்றுகையில் அமெரிக்கா புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. குடியரசு கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு நன்றி. இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினருக்கு நன்றி. இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது. 47ஆவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களுக்கு நன்றி.


















