ஆட்டிறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் தி.பி.எல். நிறுவனங்கள் குழுமத்தின் 11ஆவது கிளையான தி.பி.எல். ஆட்டு இறைச்சிக் கடை பூச்சோங் பண்டார் புத்ரியில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது. எங்கள் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையாக இறைச்சி, மளிகைக் கடை தொழில் துறையில் பயணித்து வரும் தி.பி. எல். குழுமத்தின் 11 ஆவது கிளையாக பிரான்சைஸ் என்ற புதிய அணுகுமுறையில் தற்போது முதல் முறையாக இந்தக் கிளையை திறந்திருக்கின்றோம் என்று தி.பி.எல். குழுமத்தின் தோற்றுநர் டத்தோ ரகுநாதன் தெரிவித்தார்.

ஏற்கெனவே தி.பி.எல். ஃபிரெஷ் மீட் என்ற பிரைமரி ஃபிராண்ட் கீழ் 10 கடைகள் வெற்றிகரமாக இயங்கி வரும் வேளையில் இந்தப் புதிய கிளை ஃபிரெஷ் குரோசர் என்ற பெயரில் பிரான்சைஸ்சில் கால் பதித்திருக்கின்றோம். இதன் தயாரிப்பு, தரம், பிராண்ட் அனைத்தும் திபிஎல் நேரடியாக உற்பத்தி செய்யக்கூடியவை என்று அவர் விளக்கம் அளித்தார். இன்றைய இளைஞர்கள் வியாபாரத் துறையில் தங்களை ஐடுபடுத்திக்கொள்ள இந்த பிரான்சைஸ் அணுகுமுறை சிறந்த வாய்ப்பாக உள்ளது. இதன்மூலம் அவர்கள் சுய தொழிலில் ஈடுபடலாம். பொருளாதார ரீதியாகவும் உயரலாம். முன்னேற்றத்திற்கு சிறந்த வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரான்சைஸ் எடுப்பவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அனைத்தையும் நாங்கள் வழங்குகின்றோம். இதனால் இந்த தொழில் அவர்களுக்கு சுலபமானதாக எளிமையானதாக அமையும். எங்கள் வாடிக்கையாளர்கள் பல இடங்களில் எங்கள் பொருட்களை வாங்குவதற்கு வசதியாக 50 கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். தற்போது 11 கடைகள் செயல்படுகின்றன. மேலும் 33 கடைகளை திறப்பதற்கு முயன்று வருகிறோம். அனைத்து இன மக்களும் எங்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளனர். லேம்ப் ஷோல்டர், லேம்ப் ரேக் போன்ற பிரிமியம் ரகங்களும் எங்கள் சொந்த தயாரிப்பான சாஸேஜஸ் போன்ற பொருட்களும் எங்களிடம் உள்ளன. மசாலா தடவப்பட்ட இறைச்சி வகைகளையும் நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். இதற்கிடையே 11 கடை திறப்பு விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், டத்தோ டி.மோகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
சண்முகம் செல்வம்








