தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; சட்டமன்றத்தில் நாளை தனித்தீர்மானம் கொண்டு வரும் முதல் அமைச்சர் விஜய் …

சென்னை, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் விஜய் நாளை தனித்தீர்மானம் கொண்டு வருகிறார். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய சூழலில், நாளை சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் விஜய் தனித்தீர்மானம் கொண்டு வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் , பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் பேசுவார்கள். இதையடுத்து சட்டமன்றத்தில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் எனத்தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here