நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் அந்த நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற இந்தியர்களும் நேபாள வெள்ளபாதிப்பில் சிக்கியுள்ளனர். கிட்டத்தட்ட 300 இந்தியர்கள் மாயமாகியிருப்பதாக நேபாள அரசு தெரிவித்துள்ள நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தை சேர்ந்த குழுவினர் 80 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். இது தொடர்பாக ஜக்கி வாசுதேவ் கண்கலங்கியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: – நேபாளத்திற்கு புனித யாத்திரை சென்ற ஈஷா மையத்தை சேர்ந்த 80 பேர் கொண்ட குழுவுடன் தொடர்பில்லை. 80 பேரில் 34 ஆண்கள், 46 பெண்கள் இருந்தனர். ஈஷா குழுவில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் . மாயமானவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்கவில்லை. தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. சாகா பகுதியில் சந்தித்த S3 குழுவில் 80 பேர் இருந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.










