காங்கோ: பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவ-மாணவியர் 26 பேர் பலி

கின்ஷாசா, காங்கோவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவ-மாணவியர் 26 பேர் உயிரிழந்தனர்.

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இதில் நாட்டின் சில பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

மாணவ-மாணவியர் 26 பேர் பலி

இந்நிலையில், அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு கிவு மாகாணம் புகாவு நகரில் சிம்பண்டா பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் கடந்த வியாழக்கிழமை காலை 9 மணியளவில் மாணவ மாணவியர் கல்வி பயின்றுகொண்டிருந்தனர். அப்போது பள்ளியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பள்ளியில் இருந்த மாணவ, மாணவியர் சிக்கிக்கொண்டனர்.

தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைந்தனர். மேலும், பள்ளியில் இருந்த மாணவ, மாணவியரையும் மீட்டனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் சிக்கி 19 மாணவிகள், 4 மாணவர்கள் உள்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த மாணவ, மாணவியர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here