சாலையின் நடுவில் படுத்துக் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வாகனம் மோதி உயிரிழந்தார்

  கோல தெரெங்கானுவில் உள்ள ஜாலான் ஜம்பத்தான் சுல்தான் சாலையில் நடுவே படுத்துக் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், இன்று அதிகாலை கார் மோதியதில் உயிரிழந்தார். கோல தெரெங்கானு காவல்துறைத் தலைவர் அஸ்லி நூர், இந்தச் சம்பவம் அதிகாலை 1.15 மணியளவில் நிகழ்ந்ததாகவும், 39 வயதான ஐனூன் வஹாப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டதாகவும் ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

கோங் படாக்கிலிருந்து கோல பெராங்கை நோக்கி 28 வயதான நபர் ஒருவர் தனது புரோட்டான் வாஜா காரை ஓட்டிச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அஸ்லி கூறினார். அவர் பாதிக்கப்பட்டவரைத் தவிர்க்கத் தவறியதால், அவர் மீது காரை ஏற்றிவிட்டார். பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பலத்த காயங்களால் உயிரிழந்தார்,” என்று அஸ்லி கூறினார். மேலும், ஓட்டுநருக்கு காருக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அலட்சியமாக வாகனமோட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக, சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here