ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள சோசோ கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், வயதான மாமனார், மாமியார் மற்றும் தனது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக கவிதா செங்கல் சூளையில் கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார்.
இருப்பினும் தனது குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் கவிதா உறுதியாக இருந்தார். எனவே ஊர்க்காவல் படை தேர்வுக்கு தயாராகி வந்தார். அவரிடம் பிரத்யேக ஷூக்கள் எதுவும் இல்லாத நிலையில், தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து கிராமத்திற்கு அருகில் உள்ள இடத்தில் வெறும் காலில் ஓடி பயிற்சி மேற்கொண்டார்.















