முன்னதாக, தனது ரசிகர் மன்றத்தை மாவட்ட ரீதியாக பிரித்து நிர்வாகிகளை நியமித்தார். தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையையும் தீவிர படுத்தினார். தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிய அரசியல் கட்சியின் பெயரை தனுஷ் சார்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவலும் வெளியானது. அதன்படி தனது கட்சிக்கு தமிழக எழுச்சிக் கழகம் என்று தனுஷ் பெயர் சூட்டியுள்ளார்.
இதனால் அவரது அரசியல் அறிவிப்பு விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் கோவையில் நடந்த தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தனுஷ் நற்பணி இயக்கமாக அவரது ரசிகர் மன்றம் மாறி இருக்கிறது. மன்றத்தின் பெயர் மாற்றப்பட்டதுடன் நற்பணி இயக்கத்துக்கான புதிய இலச்சினையும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த இலச்சினை தான் தனுஷ் தொடங்க இருக்கும் கட்சிக்கான கொடியாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தனுஷ் விரைவில் வெளியிடப் போவதாகவும் கூறப்படுகிறது














