16 ஆம் தேதி புதிய போராட்டம் அறிவித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி…

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர், போராட்டங்கள் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு மாற்றாக வேறு சில இடங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த கரப்பான் பூச்சி ஜனதா, நேற்று தடையை மீறி ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம் நடத்தியது. சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே உள்ளிட்டோர் ஜந்தர் மந்தரில் மூவர்ணக் கொடியை அசைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதையடுத்து, அங்கு காவலில் இருந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். அவர்களை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையி அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 16-ந்தேதி மாலை 5 மணிக்கு டெல்லி சென்ட்ரல் பார்க்கில் தேசியக் கொடியை ஏற்றும் போராட்டத்திற்கு அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

“சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றியதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். தேசியக் கொடியை ஏற்றுவது குற்றமல்ல.

எனவே, தேசபக்தர்களும், மூவர்ணக் கொடியை நேசிக்கும் அனைவரும் அக்டோபர் 16-ந்தேதி மாலை 5 மணிக்கு டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் தேசியக் கொடியுடன் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அங்கு தேசியக் கொடியை ஏற்றி, மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றமல்ல என்பதை நிரூபிப்போம்.டெல்லிக்கு வர முடியாதவர்கள் தங்கள் சொந்த நகரங்களில் மாலை நேரத்தில் மூவர்ணக் கொடி பேரணிக்கு ஏற்பாடு செய்யுங்கள். இந்த அழைப்பை விடுத்த பிறகு நான் சிறையில் அடைக்கப்படலாம். ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மூவர்ணக் கொடி எனது பெருமை; அதை நான் நிச்சயமாக ஏற்றுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here