பாரிசானுடன் இணைந்து வேட்பாளர்களை அறிவிக்கும் திட்டமா? பாஸ் மறுப்பு

 மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களை, பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியுடன் ஒரே மேடையில் வைத்து அறிவிக்கப்போவதாக வெளியான தகவலை பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மறுத்துள்ளார். சனிக்கிழமையன்று தங்களது வேட்பாளர்களை  பாரிசானும், பாஸும்  இணைந்து அறிவிக்கும் என்று பாரிசான் தலைவர்  அஹமட்  ஜாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.

தற்போதைய நிலவரப்படி, அப்படி எதுவும் இல்லை. நாங்கள் அக்டோபர் 28 அல்லது 29-ஆம் தேதிகளில் வேட்பாளர்களை அறிவிப்போம்,” என்று கோத்தா பாருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாக ‘உத்துசான் மலேசியா’  செய்தி வெளியிட்டுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 21 தொகுதிகளில் பாரிசான் போட்டியிடும் என்றும், மீதமுள்ள 7 தொகுதிகளில் பாஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் என்றும் ஜாஹிட் தெரிவித்திருந்தார். ஆனால், இது குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்று PAS தரப்பு மறுத்துள்ளது.

பெரிக்காத்தான் நேஷனல்  கூட்டணியின் துணைத் தலைவருமான துவான் இப்ராஹிம் கூறுகையில், தங்களுக்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு கூடுதல் தொகுதிகள் தேவைப்படுவதாகவும், அது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். மலாக்கா விவகாரத்தில், நாங்கள் இன்னும் முதன்மைக் குழு நிலையிலேயே இருக்கிறோம். ஜாஹிட் 7 தொகுதிகளைக் குறிப்பிட்டிருந்தாலும், இது குறித்து ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here