நடிகை சமந்தா
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இவர், தனது நடிப்பால் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
சமந்தா, கடந்த 2025-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்பமாக இருக்கும் சமந்தா குழந்தை பிறக்கும் வரை சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாகவும், குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் திரையுலகில் இணைவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கர்பமாக இருக்கும் சமந்தா ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார்.
லக்கி சார்ம் விஜய் சார் தான்
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சமந்தா என்னுடைய ஒரே லக்கி சார்ம் விஜய் சார் தான் என்று தெரிவித்துள்ளார்.அதாவது, எனக்குப் பிடித்த ஹீரோ முதல்வர் விஜய். அவருடன் இணைந்து நடித்த 3 படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. அவர் எனக்கு ஒரு லக்கி சார்ம். கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு உத்வேகமாக இருப்பவர். ஒரு தலைவராக வேண்டும் என்று முடிவெடுத்து, ஆட்சிப் பொறுப்பைத் தேர்ந்தெடுத்து, அமைதியாகவும் கவனமாகவும் செயல்பட்டு, திரைக்குப் பின்னால் கடுமையாக உழைத்து, சரியான நேரத்திற்காகக் காத்திருந்தார். என்று தெரிவித்துள்ளார்.
எனக்குப் பிடித்த ஹீரோ
இதற்கிடையில், சமீபத்திய நிகழ்ச்சியிலும் பேசிய சமந்தா, விஜய் சாரின் எளிமை, படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் சக நடிகர்களிடம் பழகும் விதம் ஆகியவையால் விஜய் சார் தான் எனக்குப் பிடித்த ஹீரோ என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






















