‘நான் விலகத் தயாராக இருக்கிறேன்’ – மீண்டும் கூறுகிறார் கரீம் ரஹ்மான்

 வரவிருக்கும் சரவாக் மாநிலத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்படாவிட்டால், தான் விலகத் தயாராக இருப்பதாக, ஐந்து முறை அசஜாயா சட்டமன்ற உறுப்பினராக இருந்த அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா இன்று மாலை மீண்டும் வலியுறுத்தினார். இருப்பினும், இந்த முடிவை தனது கட்சியான பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து (PBB)-யிடமே விட்டுவிடுவதாக மாநில சுற்றுலா, படைப்பாற்றல் தொழில் மற்றும் நிகழ்த்து கலைத்துறை அமைச்சர் கூறினார்.

நான் (இந்தப் பதவியை) விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், எனது சேவைகள் இன்னும் தேவை என்று கட்சியும் தொகுதி மக்களும் உணர்ந்தால், எங்களால் மறுக்க முடியாது என்று அவர் கூறியதாக டயாக் டெய்லி மேற்கோள் காட்டியுள்ளது.

தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் அக்டோபர் 26 அன்று மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் என்று அறிவித்த சரவாக் முதல்வர் அபாங் ஜோஹரி ஓபெங், ஆளும் கபுங்கன் பார்ட்டி சரவாக் (GPS) புதிய முகங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்களின் கலவையை வேட்பாளர்களாக நிறுத்தும் என்று இன்று முன்னதாகக் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரதிநிதிகள் தாங்களாகவே பதவி விலக முடிவு செய்துள்ளதாக ஜிபிஎஸ் தலைவர் குறிப்பிட்டார். மேலும், “பதவியில் உள்ள சிலர் நீக்கப்படவில்லை, மாறாக தாங்களாகவே விலகிக்கொள்ளத் தேர்வு செய்கிறார்கள்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆகஸ்ட் மாதம், அரசியலில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இருந்த பிறகு, புதிய தலைவர்களுக்கு வழிவிடத் தயாராக இருப்பதாக கரீம் கூறினார். தனது அரசியல் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதால், போதுமான காலம் பணியாற்றியுவிட்டதாக நம்புவதாக அபாங் ஜோஹாரியிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். கரீம் முதன்முதலில் 2001 சரவாக் தேர்தலில் அசஜாயா தொகுதியில் வெற்றி பெற்றார். அதன் பிறகு நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here