இது தொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16-ந்தேதி அன்பில் மகேசுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தநிலையில்,திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்துள்ள அவரை சென்னை போலீஸ் கமிஷன் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். கமிஷனர் அலுவலகத்தில் உள்ள 2-வது தளத்தில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டில் அன்பில் மகேஷ்தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சிரித்துக்கொண்டே காரில் ஏறி காவல்நிலையம் சென்றார். 2021 -26 வரை திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் அன்பில் மகேஷ். அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அன்பில் மகேஷ் கைது – காவல்துறை விளக்கம்
“தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், சட்டப்பூர்வ அனுமதிகள் பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அன்பில் மகேஷ் கைது. விசாரணைக்கு பிறகு அன்பில் மகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். வழக்கு தொடர்பாக ஏற்கனவே அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைக்கு அன்பில் மகேஷ்
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவ பரிசோதனைக்கு அன்பில் மகேஷ் அழைத்து செல்லப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் முன் அன்பில் மகேஷுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அன்பில் மகேஷிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.














