அமைச்சர்கள் கோபிந்த் சிங், ஃபட்லினா சிடேக் தலைமையில் பள்ளிக்கூட இணையதளம் ஒப்படைப்பு

எனது பள்ளிக்கூட இணையதளம் எனும் கல்வித் தரவுகள் இணையதளத்தை டிஜிட்டல்துறை அமைச்சு நேற்று மலேசியக் கல்வி அமைச்சிடம் அதிகாரப்பூர்வமாக அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது. டிஜிட்டல்துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடேக் ஆகியோர் தலைமையில் டாமன்சாரா உத்தாமா தேசியப் பள்ளிக்கூடத்தில் இந்த நிகழ்ச்சி கழ்ச்சி நடந்தேறியது.

மைய டிஜிட்டல் தளமாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. செகோலா கூ போர்ட்டல் எனப்படும் இந்த இணையதளம் நாடு முழுமையிலும் உள்ள பள்ளிக்கூடங்களில் அதிகாரப்பூர்வ தரவுகளை ஒருங்கிணைக்கும். பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள இடம், பின்னணி, பள்ளிக்கூட விவரங்கள் இதில் இடம்பெறும்.

இதன்மூலம் பெற்றோரும் சமுதாயத்தினரும் கல்வி சம்பந்தப்பட்ட விவரங்களை எளிதாக, விரிவாக, மிகச்சரியாக ஒரே தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். டிஜிட்டல்துறை அமைச்சுக்கும் கல்வித்துறை அமைச்சுக்கும் இடையே வியூக ஒத்துழைப்பு வாயிலாக ஒரு நிறைவான அணுகுமுறையாக இந்த இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here