வெளிநாட்டு உதயவியால் தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள் – மோடி மீது ராகுல் கடும் விமர்சனம்…

புதுடெல்லி, வெளிநாட்டு உதவியால்தான் நீங்கள் பிரதமர் ஆனீர்கள், வெளிநாட்டு உதவியால்தான் பிரதமராகவும் நீடிக்கிறீர்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், பொய்களையும் வதந்திகளையும் பரப்பி நாட்டில் நிலையற்ற தன்மையை உருவாக்க முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.

மேலும், வெளிநாடுகளின் சவால்களுக்கு நாம் தீர்வு காண முயன்று வரும் வேளையில், நாட்டிற்குள்ளேயே சில சக்திகள் நாட்டைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகப் பிரதமர் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களைக் குறிக்கும் வகையில் பேசிய மோடி, எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநாடுகளில் யாரையெல்லாம் ரகசியமாகச் சந்திக்கிறார்கள் என்றும், இந்தியாவுக்கு எதிரான சக்திகள் யாருக்கு ஆதரவளிக்கின்றன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:-

உங்கள் நிதி அமைப்பு முழுவதுமாக வெளிநாட்டினரால் கட்டுப்படுத்தப்பட்டு ஆதரிக்கப்படுகிறது

வெளிநாட்டு சமூக ஊடகங்கள் உங்களுக்கு முழு ஆதரவு அளிக்கின்றன; இதுகுறித்து வெளிப்படையான விவாதத்திற்கு நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன். எந்த மேடையிலும், எந்த நேரத்திலும் விவாதிக்கலாம். துணிச்சல் இருந்தால் வாருங்கள். இதற்கு நீங்கள் துணிய மாட்டீர்கள். ஏனெனில், உங்களைப் பற்றி எனக்குத் தெரிந்த விஷயங்களைக் கண்டு உங்களுக்கு பயம் என அதில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here