‘மிகப்பெரிய சுழலும் கோலம்’ (The Largest Rotating Kolam) – மலேசிய சாதனைப் புத்தகத்தில்  இடம்பிடித்து மைடின்  வரலாற்று சாதனை 

‘மிகப்பெரிய சுழலும் கோலத்தை’ உருவாக்கியதற்காக, மைடின் (MYDIN) நிறுவனம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysia Book of Records – MBOR) அங்கீகாரம் பெற்றுள்ளது. படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்தின் மூலம் மலேசியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் முயற்சியில், இது ஒரு பெருமைமிக்க மைல்கல்லாகும். மலேசியாவின் முதல் சுழலும் கோலத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மைடின் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. கலாச்சார மரபுகளின் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத்துடன் கொண்டாடுவதிலும், சமூகத்திற்குப் புதிய மற்றும் ஈர்க்கக்கூடிய அனுபவங்களை வழங்குவதிலும் மைடின் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது.

20 அடிக்கு 20 அடி அளவுள்ள இந்தச் சுழலும் கோலம், சக்கரம் போன்ற தனித்துவமான அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் துடிப்பான வண்ணங்கள், நுணுக்கமான வடிவியல் கோலங்கள், பாரம்பரிய இந்தியக் கலைக் கூறுகள் இணைந்துள்ளன. இதன் சுழலும் நுட்பம், பாரம்பரியக் கலை வடிவத்திற்கு ஒரு நவீன பரிமாணத்தை அளிப்பதோடு, இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் அழகை பறைசாற்றும் கண்கவர் கலைப்படைப்பாகவும் திகழ்கிறது.

இந்த முயற்சியின் மூலம், பாரம்பரியக் கலையைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், அதே வேளையில் மலேசியாவின் பன்முக கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை அதிகரிக்கவும் மைடின் நோக்கம் கொண்டுள்ளது. மேலும், படைப்பாற்றலும் புத்தாக்கமும் எவ்வாறு பாரம்பரிய நடைமுறைகளுக்கு உயிர் கொடுத்து, அனைத்துத் தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில் மாற்ற முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

 

இந்த மலேசிய சாதனைப் புத்தக்கத்தின் அங்கீகாரம், கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதிலும், சமூக உறவுகளை வலுப்படுத்துவதிலும், அனைத்து மலேசியர்களுக்கும் பண்டிகைக் கொண்டாட்டங்களை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதிலும் மைடின் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here