Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

கோலாலம்பூர்: கல்வித்துறையில் தற்போதைய தேவையை நிறைவேற்றும் வகையில், மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைகழகத்துடன் (UTM) இணைந்து உயர் கல்வி அமைச்சகம் முதல் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு (AI) இளங்கலை பட்டப்படிப்பு கடந்த ஜனவரி மாதம் உயர்கல்வி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்களின் கற்கைகளை வரும் அக்டோபர் மாத ஆட்சேர்ப்பில் தொடங்கலாம் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ப்ரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவின்...
பிரிட்ஜ் இருக்கிறது என்பதற்காக எந்த பொருளையும் அதில் வைத்துவிட முடியாது. குறிப்பிட 4 பொருட்களை வைத்தால் அது விஷமாக மாறும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். பிரிட்ஜ் எனும் குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தாலும் கண்டுபிடித்தார்கள். இதனால் கணவன்மார்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அங்கலாய்க்கிறார்கள். பிரிட்ஜ் என்பது ஒரு பொருள் வாடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.ஐஸ் கட்டியை சேமிக்க உதவுவது போன்றவற்றிக்கு ஆகும். எனவே பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட வகைகளை...
You Tube வீடியோ செயலிக்குப் போட்டியாக புதிய செயலியை, எலான் மஸ்க் அடுத்த வாரம் வெளியிட இருக்கிறார். அனைத்துக்குமான தளமாக தனது X தளத்தை (ட்விட்டர்) மாற்றும் முயற்சியின் அங்கமாக, புதிய வீடியோ செயலியை எலான் மஸ்க் வெளியிட இருக்கிறார். உலகளில் முன்னணி வீடியோ தேடல் மற்றும் பார்வை தளமாக யூடியூப் விளங்கி வருகிறது. எலான் மஸ்கின் இந்த அதிரடி கூகுளின் முக்கிய அங்கமான You Tube-பின் சந்தையை பாதிக்கக்கூடும். நஷ்டத்தில்...
வா‌ஷிங்டன்: டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடைசெய்ய வழிவகுக்கும் சட்டத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அங்கீகரித்துள்ளார். அச்சட்டம் செயல்படுத்தப்பட்டால் சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம், டிக்டாக் தளத்தின் உரிமையைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அத்தளம் தடைசெய்யப்படக்கூடும். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான குடியரசுக் கட்சியின் மைக் ஜான்சனும் அந்த சட்டத்துக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். “நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டால் நான் கையெழத்திடுவேன்,” என்று...
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கடந்த ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் அதிகம் பேசப்படும் விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கல்வி உட்பட நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அது தாக்கத்தை செலுத்தியுள்ளது. இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள  KTCT மேல்நிலைப்பள்ளி, 2021 நிதி ஆயோக் புத்தாக்கத் திட்டத்தின்கீழ் அடல் டிங்கரிங் சோதனை கூடத்தை பள்ளி வளாகத்தில் நிறுவியது. ‘மேக்கர்லேப்ஸ் எடுடேக்’ எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயற்கை...
கூகுள் AI தொழில்நுட்ப தரவுகளைத் திருடியதாக சீன நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். சீன நாட்டைச் சேர்ந்த லியோன் டிங் (38), கடந்த 2019-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். இவர், கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டிங் தரவு மையங்களில் பயன்படுத்தப்பட்ட மென்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2022 மே மாதம் முதல் 2023 மே மாதம் வரை தனிப்பட்ட கிளவுட் கணக்கில் கூகுளின்...
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் பிரபல மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் மூடுவிழா காண்கிறது என்றொரு தகவல் சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக வைரலாகி வந்தது. இதனையடுத்து கூகுள் விளக்கமளித்துள்ளது, ’சமூக ஊடக தகவலில் பாதி மட்டுமே உண்மை’ என தெளிவுபடுத்தி உள்ளது. நடப்புலக இணையசேவை மற்றும் தகவல் தொடர்பில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவைக்கு மறுக்க முடியாத இடம் உண்டு. அன்றாடம் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஜிமெயில் சேவை, வெறும் தகவல் தொடர்புக்கு...
தனது பிரபல சமூக ஊடக சேவைகளில், ஃபேஸ்புக் போலவே வாட்ஸ்ஆப்-பிலும் புரொஃபைல் படங்கள் பாதுகாப்புக்கு என புதிய வசதியை மேத்தா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. சமூக ஊடகங்களில் பயனர்களின் தனியுரிமை என்பது எப்போதுமே கேள்விக்குறியாக தொடர்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார் மத்தியில் இது தொடர்பான பாதுகாப்பின்மையும் நிலவி வருகிறது. கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது பயனர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும், வருமானத்தை பாதிக்கும் என்ற அச்சத்தால் சமூக ஊடக நிறுவனங்கள்...
ஜூன்4-ம் தேதி முதல் அமெரிக்காவில் G Pay சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே ஆப் என்ற செயலி (G Pay) உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த சேவையால் வங்கிக்குச் செல்லும் தேவையே பயனாளர்களுக்கு இல்லாமல் இருக்கிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தை பெறவும் முடிகிறது. இதனால் வங்கிப் பரிவர்த்தனைகள்...
ஒருவர் ஒரு ஸ்மார்ட் போனை பயன்படுத்தவே படாத பாடு படும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, ஒரே சமயத்தில் 20 ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதாகக் கூறி ஆச்சரியப்பட வைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், டெக் பழக்கம், குழந்தை வளர்ப்பு, ஏஐ உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.அப்போதுதான்,...