தீபாவளித் திருநாளின் உண்மையான நோக்கம் அன்பைப் பகிர்ந்து கொள்வதும், அனைவருக்கும் உதவுவதும், சமூகத்தில் நன்மைகளைப் பகிர்ந்துக் கொள்வதும் என்று ரமேஷ் ஆனந்த் கூறினார். தீபாவளியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இத்திருநாள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், அமைதி, நல்வாழ்வைக் கொண்டு வர வேண்டும் என வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வி உதவிப் பொருள்களும், தேவைப்படும் குடும்பங்களுக்கும் நல இல்லங்களுக்கும் உணவுப் பொருள்கள் அடங்கிய கூடைகளும் வழங்கப்பட்டன என ஷா அலாமில் உள்ள ஓபன் யூனிவர்சிட்டி மலேசியாவின் இயக்குநர் ரமேஷ் ஆனந்த், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் சார்பில் பல்வேறு இன மக்களின் பண்டிகைகளுக்கும் ஆதரவு வழங்கின என அவர் தெரிவித்தார்.
நோன்பு மாதம், ஹரிராயா உள்ளிட்ட பல்வேறு கொண்டாட்டங்களிலும் பங்கேற்பது பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் பண்பாடாகும். மேலும், அண்மையில் டென்மார்க் ஓபன் பூப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதுடன், பிரெஞ்சு ஓபன் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த சி. தினாவுக்கும், நாட்டுக்காகப் பத்து ஆண்டுகள் விளையாடி அண்மையில் ஓய்வுபெற்ற தியோ மேய் ஸீக்கும் அவர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார். சி. தினா ஓயுஎமின் முன்னாள் மாணவி என்பதைக் குறிப்பிட்ட அவர், போட்டிகளுக்கான பயிற்சி, தயாரிப்புகளில் மிகவும் மும்முரமாக இருந்தபோதிலும், குடும்பத்தினருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு நன்றியையும் தெரிவித்தார்.

ஓயுஎம் பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கமான ‘அனைவருக்குமான பல்கலைக்கழகம் வாழ்நாள் முழுவதும் கற்றல் என்ற கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பு முக்கியமானது என்றும் அவர் கூறினார். இதனிடையே, சிலாங்கூர் மாநில மகளிர் மேம்பாட்டு அமைப்பு, ராஜா துன் உத்தா நூலகம், பெர்மோடலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட், சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை, உள்ளிட்ட அமைப்புகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஆசிரியர் தொழிலின் தரத்தை உயர்த்துவதிலும் கல்வித்துறையின் வளர்ச்சியிலும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அண்மையில் தனிநபர் வருமான வரிச் சலுகை வரம்பு 9,000 ரிங்கிட்டிலிருந்து 12,000 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர் தம்மையோ அல்லது தமது அலுவலகப் பணியாளர்களையோ அணுகலாம் என்றும் அவர் தெரிவித்தார். புதிதாகப் பட்டம் பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், அவர்கள் அனைவரும் இனி ஓயுஎம் முன்னாள் மாணவர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், பல்கலைக்கழகத்தின் சமூகநலத் திட்டங்களுக்கு தொடர்ந்து பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களை வழங்கி ஆதரவளிக்கும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், தொழில்முனைவோருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். கல்வி, சமூகநலம், சாதனையாளர்களப்பாராட்டுதல் ஆகியவை அக்கறைமிக்க, ஒற்றுமையான, முன்னேற்றமடைந்த சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படைகளாகும்.
(எஸ்.ஷாண்)















